தமிழ்ப் பழமொழிகள் - ஆ

  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே