தமிழ்ப் பழமொழிகள் - கெ, கே

  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது
  • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
  • கெடுவான் கேடு நினைப்பான்
  • கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  • கெட்டும் பட்டணம் சேர்
  • கெண்டையைப் போட்டு வராலை இழு.
  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
  • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
  • கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
  • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
  • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.