தமிழ்ப் பழமொழிகள் - வ, வா, வி

  • வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
  • வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
  • வடக்கே கருத்தால் மழை வரும்.
  • வட்டி ஆசை முதலுக்கு கேடு.
  • வணங்கின முள் பிழைக்கும்.
  • வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
  • வருந்தினால் வாராதது இல்லை.
  • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
  • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
  • வளவனாயினும் அளவறிந் தளித்துண்
  • வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
  • வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
  • வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
  • வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
  • வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
  • வாழ்வும் தாழ்வும் சில காலம்.
  • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
  • விதி எப்படியோ மதி அப்படி.
  • வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
  • விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
  • விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
  • வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
  • விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
  • விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  • வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.