தமிழ்ப் பழமொழிகள் - ப

  • பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
  • பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
  • பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
  • பக்கச் சொல் பதினாயிரம்.
  • பசியுள்ளவன் ருசி அறியான்.
  • பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
  • பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
  • பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
  • பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
  • படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
  • படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
  • படையிருந்தால் அரணில்லை.
  • படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
  • பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
  • பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
  • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
  • பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
  • பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
  • பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
  • பணம் உண்டானால் மணம் உண்டு.
  • பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
  • பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
  • பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
  • பதறாத காரியம் சிதறாது.
  • பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
  • பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
  • பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
  • பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
  • பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
  • பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
  • பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
  • பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
  • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
  • பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
  • பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
  • பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
  • பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
  • பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
  • பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
  • பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
  • பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
  • பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.