தமிழ்ப் பழமொழிகள் - ச, சா

  • சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
  • சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
  • சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
  • சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
  • சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
  • சர்க்கரை என்றால் தித்திக்குமா?
  • சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
  • சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
  • சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
  • சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
  • சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
  • சாண் ஏற முழம் சறுக்கிறது.
  • சாது மிரண்டால் காடு கொள்ளாது.
  • சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
  • சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
  • சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.