| காமத்துப்பால் |
| உறுப்புநலனழிதல் |
1231. | சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். |
1232. | நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். |
1233. | தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். |
1234. | பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். |
1235. | கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். |
1236. | தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. |
1237. | பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து. |
1238. | முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். |
1239. | முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். |
1240. | கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. |